அஜித், விஜய் படங்களை பண்டிகை நாட்களில் வெளியிடாதீர்கள் - பார்த்திபன்

பெரிய நடிகர்களின் படங்களை விழாக்களில் வெளியிடுவதால் சிறிய பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுவதாக பார்த்திபன் கருத்து

செய்திகள் 17-Nov-2016 12:41 PM IST Chandru கருத்துக்கள்

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஆர்.பார்த்திபன் கூட்டுத் தயாரிப்பு முறையில் இயக்கித் தயாரித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படம் ரிலீஸாக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பார்த்திபன், ‘‘பெரிய நடிகர்களின் படங்களை விழாக்காலங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் நாளே, தியேட்டர்கள் திருவிழாபோல ஆகிவிடும்போது பண்டிகைகாலங்களில் எதற்காக ரிலீஸ் செய்ய வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது அதனை அதிகளவில் மக்கள் பார்க்க முன்வருவார்கள். இதனை தயாரிப்பாளர் சங்கம் கவனத்தில் கொள்ள வேணடும்’’ என்ற கருத்தை முன்வைக்கும் வகையில் அவர் பேசினார்.

அதோடு, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் இசை வெளியீட்டை டிசம்பர் 4ஆம் தேதியும், படத்தை 23ஆம் தேதியும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்தார்.

#Parthipan #Ajith #Vijay #KodittaIdangalaiNirapuga #ShanthanuBhagyaraj #ParvathiNair #CSathya #ArjunJena

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;