போலியான இணையதளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க புதிய முயற்சி!

திரைப்பட பைரசியை தடுக்க புதிய முயற்சி

செய்திகள் 17-Nov-2016 12:28 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவுக்கு இன்று பெரும் சவாலாக விளங்கி வருவது பைரசி! போலியான இணையதளங்களில் சட்டத்திற்கு புறம்பாக நிறைய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனை தடுக்கும் புதிய முயற்சியாக ‘ஃபிரெண்ட் எம்.டி.எஸ்.’ என்ற நிறுவனம் செயல்படவிருக்கிறது. இதன் ஆரம்பகட்டமாக போலியான இணையதளங்களில் எப்படி திரைப்படங்கள் வெளியாகாமல் தடுக்கலாம் என்பது குறித்த ஒரு கருத்தரங்கம் நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் இயக்குனர் வெங்கட் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளச்ர் சங்கத்தின் துணை தலைவர் பி.எல்.தேனப்பன், ‘ஃபிரெண்ட் எம்.டி.எஸ்.’ நிறுவனத்தின் துணை தலைவர் பால் ஹேஸ்டிங்ஸ், இந்நிறுவனத்தின் இந்திய பங்குதாரர் ராகுல் நேரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு பேசிய விவரம் வருமாறு! ‘‘இந்த நிறுவனத்துடன் நாங்கள் கை கோர்த்திருப்பது ஒட்டுமொத்த ‘சென்னை-28, இரண்டாவது இன்னிங்ஸ்’ படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ‘சென்னை-28, இரண்டாவது இன்னிங்ஸ்’ திரைப்படம் இந்நிறுவனத்தின் மூலம் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்நிறுவனம் தமிழ் சினிமாவுக்கு பெரும் கவசமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை’’ என்று கூறியுள்ளார்.

#VenkatPrabhu #Chennai28II #PraveenKL #PLThennapan #RahulNera #Biriyani #Mankatha #Masss

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி


;