பிரஜன், அஷ்மிதா, ரிச்சர்ட் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. அறிமுக இயக்குனர் மோகன்.ஜி இயக்கியுள்ள இப்படம் அடுத்த (டிசம்பர்) மாதம் 2-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இப்படதிதின் முலம் தமிழ் சினிமாவில் விநியோக நிறுவனமாக அறிமுகமாகிறது ‘அனாமிகா பிக்சர்ஸ்’. நடிகரும் ‘புத்தகம்’ படத்தை இயக்கியவருமான விஜய் ஆதிராஜ் மற்றும் இளையா.வி.எஸ்.இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள ‘அனாமிகா பிக்சர்ஸ் ’நிறுவனம் தனது முதல் வெளியீடாக ‘பழைய ‘வண்ணாரப்பேட்டை’ படத்தை தமிழகமெங்கும் விநியோகம் செய்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘மோ’ மற்றும் ‘ஆந்திரா மெஸ்’ ஆகிய படங்களையும் இந்நிறுவனம் வெளியிடுகிறது. இந்த ‘அனாமிகா பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் லோகோ வெளியீட்டும், ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியும் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜய் ஆதிராஜ் பேசும்போது,
‘‘இப்போதுள்ள சூழ்நிலையில் திரைப்படங்களை தயாரிப்பது எளிது! ஆனால் அப்படி தயாரித்த படங்களை வெளியிடுவது தான் கடினமான வேலையாக இருக்கிறது. இப்போது தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் உருவாகிறது. ஆனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களை, முன்னணி நடிகர்கள் இல்லாத படங்களை வாங்கவோ, விநியோகம் செய்யவோ பெரும்பாலும் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இது போன்ற நிலையில் இருக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கத்தில் துவங்கியது தான் இந்த ‘அனாமிகா பிக்சர்ஸ்’ நிறுவனம். இந்த நிறுவனம் மூலம் விநியோகிக்கப்படும் ஒவ்வொரு படத்தின் கணக்கு வழக்குகளும் ஒழுங்காக இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார் விஜய் ஆதிராஜ்!
#PazhayaVannarapettai #Prajin #Ashmitha #Richard #MohanG #AnamikaPictures #VijayAdhiraj #IlayaVS
‘மான்ஸ்டர்’ படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ராதாமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும்,...
அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜடா’. இந்த படத்தில் கதிருடன்...
அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜடா’. இந்த படத்தில் கதிருடன்...