‘எதிர்நீச்சல்’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனை நாயகனாக்கி ‘காக்கி சட்டை’ படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் ‘கொடி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்குப் பிறகு தனுஷிற்கு ஹிட் படமாக ‘கொடி’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த ‘கொடி’ படத்தை சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பார்த்து மகிழ்ந்தாராம். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் ரஜினிக்கு மிகவும் பிடிக்கவே, தனுஷிடம் மீண்டும் அதே இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கச் சொல்லி அறிவுறுத்தினாராம். இதனால், உடனடியாக ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் தனுஷ்.
#Dhanush #Kodi #DuraiSenthilkumar #Rajinikanth #Trisha #SanthoshNarayanan #WunderbarFilms #VIP2
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...