தயாரிப்பாளராக களமிறங்கும் நிதின் சத்யா!

திரைப்பட தயாரிப்பாளரகும் நிதின் சத்யா!

செய்திகள் 17-Nov-2016 10:55 AM IST VRC கருத்துக்கள்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., சென்னை-28, சத்தம் போடாதே, திருடன் போலீஸ் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நிதின் சத்யா. இவர் தற்போது ‘பிளாஸ்’ கண்ணனுடன் சேர்ந்து ‘ஃப்ரைடே மேஜிக் என்டர்டெயின்மென்ட்’ என்ற பட நிறுவனத்தை துவங்கி, திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகவிருக்கும் படத்தை அறிமுக இயக்குனர் நந்தா மணிவாசகம் இயக்குகிறார். இவர் பிரபல வசனகர்த்தா விஜியிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று (16-11-16) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிய்ல் இயக்குனர் வெங்கட் பிரபு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ், இயக்குனர் சரண், எஸ்.பி.பி.சரண் உட்பட பலர் கலந்துகொண்டு நிதின் சத்யாவை வாழ்த்தினர். நிதின் சத்யா தயாரிக்கவிருக்கும் படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

#FridayMagicEntertainment #NithinSathya #PremgiAmaran #VenkatPrabhu #Jai #Chennai28II

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;