தெலுங்கு சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

தெலுங்கு சூப்பர்ஸ்டார் பவன் கல்யாணின் 25வது படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்

செய்திகள் 17-Nov-2016 10:35 AM IST Chandru கருத்துக்கள்

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வளர்ந்துவிட்டவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் வெளிவந்ததை அடுத்து, தற்போது விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ’தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் ‘பைரவா’வில் கீர்த்தி சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதால், தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்காக சூர்யாவுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் 25வது படத்திற்கான நாயகி வேட்டை நடைபெற்று வந்தது. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் அப்படத்தில் நாயகியாக நடிக்க முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்குமாம்.

#PawanKalyan #KeerthySuresh #Trivikram #Bairavva #Remo #Jalsa #AttarintikiDaredi #TrivikramSrinivas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

OMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்


;