விக்ரமை இயக்கும் ‘வாலு’ இயக்குனர்!

‘வாலு’ இயக்குனர் விஜய்சந்தருடன்  கை கோர்க்கும் விக்ரம்!

செய்திகள் 17-Nov-2016 10:16 AM IST VRC கருத்துக்கள்

‘இருமுகன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஆவலும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்து வந்தது. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்ரம் அடுத்து சிம்புவை வைத்து ‘வாலு ’படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பில் இப்படத்தை ‘SFF’ என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறது என்றும் இப்படத்தின் தலைப்பு, நாயகி மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞ்ரகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது. அத்துடன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம் இப்போது தேர்வு செய்துள்ள கதையும் வித்தியாசமானதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறதாம். இந்த படத்தை முடித்த பிறகு ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம்.

#Vikram #VijayChander #Vaalu #Irumugan #STR #Hansika #SFF #Hari #Saamy2 #Garuda #Thiru

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;