ராஜீவ் மேனன், ஜி.வி. பட டைட்டில் – ‘சர்வம் தாள மயம்’

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.நடிக்கும் ‘சர்வம் தாள மயம்’

செய்திகள் 16-Nov-2016 3:21 PM IST VRC கருத்துக்கள்

’மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவிருக்கிறார் என்றும் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். மியூசிக்கல் சப்ஜெக்ட்டாக இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்போது பட சப்ஜெக்ட்டுக்கு ஏற்ற மாதிரி படத்திற்கு ‘சர்வம தாள மயம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறுகிறதாம். அதில் 4 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#RajivMenon #GVPrakashKumar #MinsaraKanavu #KandukondenKandukonden #ARRahman #SarvamaThalaMayam #Ajith #ArvindSwamy #PrabhuDeva

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;