ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகி வரும் ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் 20-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சம்பந்தப்பட்ட பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘2.0’வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் மாலை 5 மணிக்கு நடக்க இருக்கிறது. இவ்விழாவில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் , இயக்குனர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வரும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ அதிபர் சுபாஷ்கரன் உட்பட பல பிரபலங்களும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அத்துடன் இவ்விழாவில் ஹிந்தி திரைப்பட உலகை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பாலிவுட்டை சேர்ந்த பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவை லைக்கா நிறுவனத்தின் அதிகாரபூர்வ யு-டியூப் பக்கம் மற்றும் ‘லைக்கா’ நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலமாகவும் நேரடியாக கண்டு களிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை லைக்கா நிறுவனம் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.
#Endhiran2 #Rajinikanth #Shankar #ARRahman #AmyJackson #AkshayKumar #LycaProduction #KaranJohar #2PointO
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
‘மேயாத மான்’, ‘மான்ஸ்டர்’ படப் புகழ் நடிகையான பிரியா பவானி சங்கர் இப்போது மாஃபியா, பொம்மை,...