விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரசிவாஜி’ விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘முடிசூடா மன்னன்’ மற்றும் விக்ரம் பிரபுவின் ‘ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ நிறுவனம் சார்பாக தயாராகி வரும் ‘நெருப்புடா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன். இப்படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சூர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு ‘பக்கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் தகவல் கிடைத்துள்ளது. விக்ரம் பிரபு வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது ‘படம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது, இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
#VikramPrabhu #VeeraSivaji #MudiSoodaMannan #Pakka #NeruppuDa #Suriya #SathyaJothiFilms #Wagah
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...