நிஜ சம்பவங்களை கொண்ட ‘பழைய வண்ணாரப்பேட்டை’

பிரஜன், நடித்திருக்கும் அரசியல் த்ரில்லர் படம் பழைய வண்ணாரப்பேட்டை!

செய்திகள் 16-Nov-2016 11:56 AM IST VRC கருத்துக்கள்

பிரஜன் கதாநாயகனாகவும், அஷ்மிதா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. மோகன்.ஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பிரஜன், அஷ்மிதாவுடன் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கனா பாலா, சேசு, மணிமாறன், ஆதித்யா, பரணி, கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படம் குறித்து இயக்குனர் மோகன்.ஜி கூறும்போது,

‘‘அரசியல் கலந்த த்ரில்லர் படம் இது. பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் பிரஜனின் நண்பன் எதிர்பாராத விதமாக ஒரு கொலை சம்பவத்தில் குற்றவாளியாகிறான். அந்த கொலைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டு பிடித்து பிரஜன் தனது நண்பனை எப்படி காப்பாற்றினார் என்பது தான் இப்படத்தின் கதை. நான் பிறந்து வளர்ந்தது பழைய வண்ணாரப்பேட்டையில் தான் என்பதால் அங்கே நான் பார்த்த நிஜ சம்பவங்ளை வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன்’’ என்றார்.

இந்த படத்தை ‘கிருஷ்ணா டாக்கீஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்க, ‘அனாமிகா பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் இளையா.வி.எஸ். வெளியிடுகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை பாருக் கவனிக்க, ஜுபின் இசை அமைத்துள்ளார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

#PazhayaVannarapettai #Prajin #Richard #Velmurugan #MohanG #RoboShankar #KrishnaTalkies #AnamikaPictures

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;