‘பி அன்ட் சி’யில் கணிசமாக கல்லா கட்டிய ‘கிடாரி’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்திருக்கும் படம் ‘பலே வெள்ளையத் தேவா’. அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். காமெடிப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் சங்கிலி முருகனும், கோவை சரளாவும் நடித்துள்ளனர். ‘கிடாரி’யைத் தொடர்ந்து இப்படத்திற்கும் ‘டர்புக்கா’ சிவா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரவீந்திரநாத் குரு.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் இம்மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 50 நாட்கள் நடந்த படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் இப்படத்தின் டப்பிங்கும் துவங்கியுள்ளதாக நடிகர் சசிகுமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஜெட் வேகத்தில் உருவாகிவரும் இப்படம் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே வெளியானாலும் ஆச்சரியமில்லை என்கிறது படக்குழு.
#BalleVellaiyathevaa #Sasikumar #Kidaari #SolaiPrakash #DhanyaRavichandran #KovaiSarala #DarbugaSiva
இரண்டாம் பாக வரிசையில் உருவாகியுள்ள மற்றொரு படம் ‘நாடோடிகள்-2’. முதல் பாக ‘நாடோடிகள்’ படத்தை இயக்கிய...
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்க, சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் மற்றும்...
பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘கென்னடி கிளப்’. இந்த படத்தில்...