ரிலீஸ் தேதியை உறுதி செய்த சைத்தான்!

டிசம்பர் 2-ல் வெளியாகும் ‘சைத்தான்’, ‘பழைய வண்ணாரப்பேட்டை’

செய்திகள் 16-Nov-2016 11:41 AM IST VRC கருத்துக்கள்

‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கிற படம் ‘சைத்தான்’. அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை முதலில் இம்மாதம் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென்று அறிவிக்கப்பட்ட பணக்கட்டுப்பாடால் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதை போல ‘சைத்தான்’ படத்தின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டது. ‘சைத்தான்’ படம் இம்மாதம் 25 ஆம் தேதி அல்லது டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருக்கிறது என்ற தகவலை நேற்று வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பினர் முடிவு செய்ய, தமிழ், தெலுங்கில் ‘சைத்தான்’ டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சுசீந்திரன் இயக்கியுள்ள ‘மாவீரன் கிட்டு’ டிசம்பர் 1-ஆம் தேதியும், .மோகன்.ஜி இயக்கியுள்ள ‘பழைய வண்ணாரப்பேட்டை’ டிசம்பர் 2-ஆம் தேதியும் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிட்த்தக்கது.

#VijayAntony #Saithan #Vishal #KaththiSandai #MaaveeranKittu #VishnuVishal #Prajin #PazhayaVannarapettai #Suseendiran #DImman #Jiiva #KavalaiVendam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;