வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை-600028 ’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை- 28 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தை முதலில் இம்மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஆனால் திடீரென்று மத்திய அரசு அறிவித்த பணக்கட்டுப்பாடுகளால் நிறைய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதை போல வெங்கட் பிரபுவின் பட ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது நாட்டில் பணப்புழக்கம் ஓரளவுக்கு சீராகி வரும் நிலையில் பல படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள நிலையில் ‘சென்னை-28 இரண்டாவது இன்னிங்ஸ்’ படத்தை இம்மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, இம்மாதம் 24-ஆம் தேதி ஜீவா, காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் வெளியாகவிருக்கிறது. ‘சென்னை-28’ முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, பிரேம்ஜி, விஜய்வசந்த், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, அஜய்ராஜ் இளவரசு, விஜயலட்சுமி, அஞ்சனா கீர்த்தி, மகேஸ்வரி முதலானோருடன் இரண்டாம் பாகத்தில் தயாரிப்பாளர் டி.சிவா, வைபவ், மஹத், கிருத்திகா, டாக்டர் வித்யா, அறிமுகம் சனா ஆகியோரும் கை கோர்த்து களமிறங்குகின்றனர்.
#Chennai28II #VenkatPrabhu #PremgiAmaran #Shiva #Jai #NithinSathya #YuvanShankarRaja #Vijayalakshmi
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
‘தெரு நாய்கள்’, ‘படித்த உடன் கிழித்து போடவும்’ ஆகிய படங்களை இயக்கிய் ஹரி உத்ரா இயக்கியுள்ள படம்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...