‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் ‘பவர் பஞ்ச்’ ரீ என்ட்ரி கொடுத்த மாதவன், அதன் பிறகு வேறெந்த தமிழ்ப்படங்களையும் கமிட் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில், விஜய்சேதுபதியுடன் இணைந்து மாதவன் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் என்றும், அப்படத்திற்கு ‘விக்ரம் வேதா’ என டைட்டில் வைத்திருப்பதாகவும் நமது இணையதளத்தில் பிப்ரவரியில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும், டைட்டில் டிசைனையும் வெளியிட்டிருக்கிறார்கள். வரலட்சுமி சரத்குமார், ‘யு டர்ன்’ ஷ்ரதா ஸ்ரீநாத் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் ‘சிகை’ கதிரும் நடிக்கிறார்.
ஓரம் போ, வா ஆகிய படங்களைத் தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கும் ‘விக்ரம் வேதா’ திரைப்படம் காப் த்ரில்லராக உருவாகவிருக்கிறதாம். ஒய்நாட் ஸ்டுடியோஸ், டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் கெவின் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை இயக்குனராகவும் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
‘விக்ரம் வேதா’வில் மாதவன் போலீஸாகவும், விஜய்சேதுபதி கேங்ஸ்டராகவும் நடிக்கவிருக்கிறார்களாம். இன்றுமுதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
ஒளிப்பதிவு – P.S.வினோத்
இசை - சாம் C.S
வசனம் – மணிகண்டன்
பாடல்கள் - முத்தமிழ்
நடனம் - கல்யாண்
படத்தொகுப்பு - ரிச்சர்ட் கெவின்
கலை இயக்குனர் - வினோத் ராஜ்குமார்
சண்டை பயிற்சி - திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு - நிகில்
நிர்வாக தயாரிப்பு - சக்ரவர்த்தி ராமசந்திரா
தயாரிப்பு மேற்பார்வை – முத்துராமலிங்கம்
எழுத்து இயக்கம் - புஷ்கர் – காயத்ரி
தயாரிப்பு - சசிகாந்த் YNOT ஸ்டுடியோஸ்
#VikramVedha #Madhavan #VijaySethupathi #Kathir #Varalakshmi #ShradhaSrinath #PushkarGayathri #Iruthisuttru #OramPo
Direction: Priya Krishnaswamy Production: Reckless Roses Cast: R Raju, Sukumar Shanmugam, SP...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...