விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ திரைப்படம் இம்மாதம் 17ஆம் தேதி ரிலீசாகவிருந்தது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடல் இப்படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். அநேகமாக ‘சைத்தான்’ இம்மாதம் 25-ஆம் தேதி அல்லது டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீசாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் போல விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திசண்டை’ படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பந்தமான விளம்பரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன் கிட்டு’ டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதை அப்படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதைப் போல அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்து வந்த ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தையும் டிசம்பர் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக இப்படத்தின் இயக்குனர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். பிரஜின், ரிச்சர்ட், நிஷாந்த் முதலானோர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகவிருக்கிறது. நிறைய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் இந்த 4 படங்கள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, அதாவது இம்மாதம் 24-ஆம் தேதி ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கவலை வேண்டாம்’ என்ற படம் வெளியாகவிருப்பதை அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
#VijayAntony #Saithan #Vishal #KaththiSandai #MaaveeranKittu #VishnuVishal #Prajin #PazhayaVannarapettai #Suseendiran #DImman #Jiiva #KavalaiVendam
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு...