‘தர்மதுரை’ படத்திற்கு 5 ‘ஏசியா விஷன்’ விருதுகள்!

விஜய்சேதுபதி, தமன்னா நடித்த ‘தர்மதுரை’ படத்திற்கு 5 விருதுகள்!

செய்திகள் 15-Nov-2016 3:06 PM IST VRC கருத்துக்கள்

கடந்த ஒரு சில ஆண்டுகளாக மலையாள திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் ‘ஏசியா விஷன் விருது’ என்ற பெயரில் சினிமா விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வருகிற 18-ஆம் தேதி ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட உலகை சேர்ந்த பல கலைஞர்கள் விருது பெறவிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கான விருது பிரிவில் சீனூராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படமாக ‘தர்மதுரை’ தேர்வு செய்யப்பட, இவ்விருதை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பெற்று கொள்கிறார். சிறந்த இயக்குனராக சீனுராமசாமி, சிறந்த நடிகராக விஜய்சேதுபதி, சிறந்த நடிகையாக தமன்னா மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக ஷாஜி ஆகியோர் ‘தர்மதுரை’க்காக விருதுகள் பெறவிருக்கின்றனர் ‘ஐ’ மற்றும் ‘தெறி’யில் நடித்த ஆமி ஜாக்சனுக்கு சிறப்பு விருது, ‘தெறி’யில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் மகள் நைனிகா ஆகியோரும் விருது பெறவிருக்கிறார்கள்.

மலையாள திரையுலகை சேர்ந்த மோகன்லால், நிவின் பாலி, மஞ்சு வாரியர், பாலிவுட்டை சேர்ந்த சோனம் கபூர், ராதிகா ஆப்தே, தெலுங்கு பட உலகை சேர்ந்த ராம்சரண் உட்பட பல பிரபலங்கள் இவ்விழாவில் விருது பெறவிருக்கிறார்கள்.

#Dharmadurai #VijaySethupathi #Tamannah #SeenuRamasamy #SrustiDonge #YuvanShankarRaja #RKSuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;