நயன்தாராவின் 55-வது பட அறிவிப்பு!

17-ஆம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகிறது நயன்தாராவின் 55-வது பட அறிவிப்பு!

செய்திகள் 15-Nov-2016 12:26 PM IST VRC கருத்துக்கள்

‘இரு முகன்’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களுடன் சத்தமில்லாமல் மற்றொரு படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. அறிமுக இயக்குனர் கோபி நாயனார் இயக்கத்தில் பெயரிப்படாமல் வளர்ந்து வந்த இப்படத்தில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. மீதியுள்ள படப்பிடிப்புக்காக ஏவி.எம்.ஸ்டுடியோவில் தற்போது செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்புடன் படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை 17-ஆம் தேதி இரவு 12 மணிக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர். இது நயன்தாரா நடிக்கும் 55-ஆவது படம் என்ற அறிவிப்புடன் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் கோட்பாடி ஜெ.ரமேஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை காட்சிகளை பீட்டர் ஹெய்ன் அமைக்கிறார். தேசிய விருது பெற்ற லால்குடி இளையராஜா கலை இயக்குனராக பணி புரிந்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ‘காக்கா முட்டை’ படப் புகழ் விக்னேஷ், ரமேஷ் மற்றும் வேலு ராமமூர்த்தி, ஈ.ராமதாஸ், சுனுலட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். விரைவில் ரிலீசாகவிருக்கிற இப்படத்தை தொடர்ந்து ‘பில்லா-2’ படத்தை இயக்கிய சக்ரி டொலேட்டி இயக்கத்தில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அது குறித்த பேச்சு வார்த்தைகள் இப்போது நடந்து வருகிறது என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

#Nayanthara #Maya #Irumugan #ThaniOruvan #Kaashmora #GopiNayanar #Vignesh #Ramesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;