‘‘ஒருசிலரின் தவறுகளுக்காக 80% மக்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர்!’’ - நடிகர் விஜய்

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கை குறித்து நடிகர் விஜய் கருத்து

செய்திகள் 15-Nov-2016 12:21 PM IST Chandru கருத்துக்கள்

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராகவும், முக்கிய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக பேசிவருபவர் நடிகர் விஜய். இதனால் சில சமயங்களில் அவரின் பட ரிலீஸுக்கே பிரச்சனைகளும் எழுந்துள்ளன. ஆனாலும், தன் கருத்தை முன்வைப்பதில் அவர் எப்போதும் தயங்கியதில்லை. அந்தவகையில், சமீபத்தில் கறுப்புப்பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் நடிகர் விஜய் மனம் திறந்து செய்தி சேனல்களுக்க பேட்டியளித்துள்ளார்.

‘‘கறுப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும்போது, அதற்கான பாதிப்புகளும் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த நோக்கத்தினால் கிடைக்கும் பலனைவிட, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்திருக்க வேண்டும். 20% பணக்காரர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் செய்த தவறுகளுக்காக, 80% பொதுமக்கள் பாதிப்பபுகளைச் சந்தித்து வருகின்றனர். இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கும்போது, என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை முன்கூட்டியே யோசித்து செயல்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!’’ என்று நடிகர் விஜய் பேட்டியின்போது குறிபிட்டார்.

#Vijay #Modi #Bairavaa #Theri #Puli #Jilla #PrimeMinister #Ilayathalapathi #KeerthySuresh #Sathish #Bharathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;