ரிலீஸ் தேதி குறித்த மாவீரன் கிட்டு!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சரித்திர கதை ‘மாவீரன் கிட்டு’

செய்திகள் 15-Nov-2016 12:03 PM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன் கிட்டு’. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி முதலானோர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 1985-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு மாவீரனின் கதை ‘மாவீரன் கிட்டு’. சரித்திர பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். டி.என்.தாய் சரவணனும் கலை இயக்குனர் ராஜீவனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

#MaaveeranKittu #VishnuVishal #Suseendiran #SriDivya #Parthipan #Soori #DImman #Rajeevan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;