தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஷால் பேட்டி!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஷால் பேட்டி!

செய்திகள் 15-Nov-2016 11:40 AM IST VRC கருத்துக்கள்

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தன்னை தற்காலிகமாக நீக்கியிருப்பதாக விஷாலுக்கு வந்த தகவலை அடுத்து, அதற்கு பதிலளிக்கும் வகையில், நடிகர் விஷால் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

‘‘தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து என்னை நீக்கிய தகவல் வியப்பளிப்பதாக இருக்கிறது. எப்போதும் எந்த ஒரு சங்கத்தில் இருந்து கடிதம் அனுப்பும்போது முதலில் சம்பந்தபட்ட நபர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தான் பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்புவார்கள். உறுப்பினர் பதவியில் இருந்து நான் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது பத்திரிக்கை நண்பர்கள் மூலமாக தான் தெரிய வந்தது. எனக்கு இப்போது வரை எந்த கடிதமும் வரவில்லை. போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதுவும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள். போண்டா, பஜ்ஜி என்பது கெட்ட வார்த்தையா? அது ஒரு தவறான உணவு இல்லை. நடிகர் சங்கத்தில் மற்றும் எங்கள் படப்பிடிப்பில் நாங்கள் அதை தான் சாப்பிடுகிறோம்.

என்னை பொறுத்தவரை சின்ன தயாரிப்பாளர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் என்று இல்லை. அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் குரல் கொடுப்போம். தமிழ் திரையுலகம் எனக்கு சாப்பாடு போட்ட தெய்வம். அதற்கு ஏதாவது தவறான விஷயம் நடந்தால் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். கேள்வி கேட்பது தவறு இல்லை. எல்லா சங்கத்திலும் கேள்வி கேட்க முடியும். கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் சொல்ல வேண்டும். நான் இப்போது என்னை எதற்காக நீக்கி இருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் இதை நிச்சயம் எதிர் கொள்வேன். இதற்கு சட்ட ரீதியான விஷயம் என்ன என்பதை நான் என்னுடைய வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன். ஜனவரி மாதம் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரப்போகிறது. தயவு செய்து தேர்தலை நடத்த விடுங்கள். முறையாக அந்த தேர்தல் நடைபெற வேண்டும். எல்லோருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கும். எல்லோருடைய பார்வைக்கும் மதிப்பளித்து தேர்தலை நடத்த விடுங்கள். வருகிற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும்.

நான் யாருக்கும் எதிரி இல்லை. நான் சில தயாரிப்பாளர் சங்கத்தில் சில கேள்விகளை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் வரவில்லை. கேள்வி கேட்டால் பதில் வரவில்லை என்னும் பட்சத்தில் தேர்தலில் நிற்கவும் எனக்கு பயமில்லை. விஷால் என்ற தயாரிப்பாளருக்கே இந்த கதி என்றால் , சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் கேள்வியே கேட்க கூடாதா? நான் அனைத்து தயாரிப்பாளார்கள் நலனுக்காக பாடுபடுவோம்’’ என்றார் விஷால்.

#VishalPressMeet #Vishal #NadigarSangam #ProducersCouncil

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;