பணத்தட்டுப்பாடால் ரிலீஸ் தள்ளும் ‘சைத்தான்’

தள்ளிப் போகும் ‘சைத்தான்’ பட ரிலீஸ்!

செய்திகள் 14-Nov-2016 11:49 AM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ இந்த வாரம் 17-ஆம் தேதி ரிலீசாகவிருந்தது. ஆனால் இப்போது இப்படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் நாட்டில் தற்போது நிலவி வரும் பணத்தட்டுப்பாடுதானாம்! 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் ஏற்பட்டுள்ள சட்ட விதிமுறைகளால் தற்போது மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துள்ளது. இதனால் தியேட்டருக்கு படம் பாரக்க வரும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் ‘சைத்தான்’ பட ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார்கள். இந்த படம் அடுத்து எந்த தேதியில் ரிலீஸ் ஆகும் என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள ‘சைத்தான்’ படத்தை விஜய் ஆன்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ தயாரிக்க, தமிழகமெங்கும் ’ஆரா சினிமாஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

#Saithan #VijayAntony #PradeepKrishnamoorthy #AuraaCinemas #VijayAntonyFilmCorporation #Naan #Salim

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;