தெலுங்கில் டூயட் – மார்ச்சில் வெளியாகும் ‘காற்று வெளியிடை’

மணிரத்னம் படத்திற்கு கே.பாலச்சந்தரின் படத்தலைப்பு!

செய்திகள் 14-Nov-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் ‘காற்று வெளியிடை’. கார்த்தி பைலட்டாக நடிக்கும் இப்படத்தில் அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியை தொடர்ந்து சமீபத்தில் காஷ்மீரிலும் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் ‘டூயட்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு, மீனாட்சி சேஷாத்ரி நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் 1994-ல் வெளியான படம் ‘டூயட்’. இப்போது கே.பாலச்சந்தரின் படத்தலைப்பை தனது படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார் மணி ரத்னம். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி முதன் முதலாக நடிக்கும் இப்படம் மார்ச் மாதம் வெளியாகவிருக்கிறது.

#KaatruVeliyidai #ManiRatnam #Karthi #AditiRaoHydari #ARRahman #Duet #Balachander #MadrasTalkies

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;