‘தள்ளிப்போகாதே...’ வரவேற்பைப் பார்க்க தியேட்டருக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

தன் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்ட ரஹ்மான் தியேட்டருக்கு விசிட் அடித்துள்ளார்

செய்திகள் 14-Nov-2016 10:35 AM IST Chandru கருத்துக்கள்

தான் இசையமைத்த படங்களின் புரமோஷனுக்காக ஆடியோ விழா, பத்திரிகையாளர் சந்திப்பு போன்றவற்றில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு வருவது வாடிக்கைதான். ஆனால், தன் பாடல்களுக்கு தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அவர் சமீபகாலமாக தியேட்டர்களுக்கு விசிட் அடிப்பதில்லை. காரணம், அவரைப் பார்க்க கூட்டம் கூடிவிடும் என்பதால்தான். ஆனால், கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பாடல்களுக்கு தியேட்டரில் ரசிகர்கள் எப்படி ரெஸ்பான்ஸ் தருகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு ஆவலாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று மாலை சத்யமா தியேட்டருக்கு விசிட் அடித்துள்ளார்.

குறிப்பாக, 2 கோடிக்கும் மேற்பட்ட பார்வையிடல்களைப் பெற்ற ‘தள்ளிப்போகாதே....’ பாடலின் வெற்றியை நேரில் கண்டுகளிக்க வேண்டுமென்பதற்காக இந்த திடீர் விசிட்டாம். தியேட்டரின் வாசல் அருகிலேயே நின்று ரசிகர்களின் உற்சாக கரகோஷத்தை கண்டுகளித்துள்ளார் ரஹ்மான். இதனை ட்விட்டர் ‘பெரிஸ்கோப்’பில் லைவ் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ஆர்.

#ARRahman #ThalliPogathey #AchchamYenbadhuMadamaiyada #SathyamCinemas #Gauthammenon #ManjimaMohan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;