தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக பட விநியோகத்தில் சூர்யா ரசிகர்கள்!

‘சிங்கம் 3’ படத்தின் விநியோக உரிமையை சூர்யா ரசிகர்கள் குழு ஒன்று கைப்பற்றியிருக்கிறது

செய்திகள் 14-Nov-2016 9:56 AM IST Chandru கருத்துக்கள்

ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து 5வது முறையாக ‘சி 3’ மூலம் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. ஏற்கெனவே இந்த கூட்டணியில் வெளிவந்த அனைத்துமே ஹிட் படங்கள் என்பதோடு, சிங்கம் படத்தின் 2 பாகங்களுமே சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் இப்படத்தின் 3ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தியேட்டர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் ‘சி 3’ படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற பெரியளவில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது.

இந்நிலையில், கேரளா பகுதி விநியோக உரிமையை ‘ஆல் கேரளா சிங்கம் சூர்யா ஃபேன்ஸ் அன்ட் வெல்ஃபேர் அசோஷியேன்’ என்ற சூர்யா ரசிகர்கள் குழு கைப்பற்றியிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தங்களின் ஆஸ்தான ஹீரோ நடித்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் முதல் ரசிகர்கள் சூர்யாவின் ரசிகர்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு விநியோக விஷயத்தில் இதுஒரு புதிய பாதையையும் ஏற்படுத்தியிருப்பதாக விநியோக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

#S3 #Suriya #Anushka #ShrutiHaasan #Hari #HarrisJayaraj #StudioGreen #Singam3 #Vel #Anjaan #Singam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;