இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் ராமுசெல்லப்பா இயக்கியிருக்கும் படம் ‘எங்கிட்ட மோதாதே’. நட்டி நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி, ‘மூடர்கூடம்’ படப் புகழ் ராஜாஜி, பார்வதி நாயர், ராதாரவி, விஜய் முருகன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை டிசம்பர் 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அடுத்தடுத்து நிறைய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்பட வெளியீட்டு அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக இசை அமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
ஈராஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துடன் ஆர்.வி.ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ‘பிச்சைக்காரன்’, ‘இறைவி’, ‘குற்றமே தண்டனை’ உட்பட பல படங்களை விநியோகம் செயத கே.ஆர்.ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
#EnkittaMothathe #Natraj #RadhaRavi #RamuChellappa #SanchitaShetty #VijayMurugan #EnkittaMothatheReleaseDate
ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுத்து வரும் சீஸன் இது. ரஜினிகாந்தின்...
‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குனர்...
‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த...