பாபி சிம்ஹா, ஆதியை தொடர்ந்து விஷ்ணுவிஷால்!

‘உறுமீன்’ பட நிறுவனத்துக்காக விஷ்ணு விஷால் நடிக்கும் படம்!

செய்திகள் 12-Nov-2016 3:13 PM IST VRC கருத்துக்கள்

பாபி சிம்ஹா நடிப்பில் ‘உறுமீன்’ திரைப்படத்தை தயாரித்த ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ ஜி.டில்லி பாபு அடுத்து தயாரிக்கும் படம் ‘மரகத நாணயம்’. இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ மூன்றாவதாக தயாரிக்கும் படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. விஷ்ணு விஷாலுடன் காளிவெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ராம்குமார் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். பி.வி.சங்கர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கலை இயக்கத்தை ஏ.கோபி ஆனந்தும், ஆடை வடிவமைப்பு பணிகளை கீர்த்தி வாசனும் கவனிக்கிறார்கள். பாபி சிம்ஹா, ஆதியை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் இப்படத்தை தயாரிக்கும் டில்லி பாபு இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற 29-ஆம் தேதி துவங்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு தற்போது நடந்து வருகிறது.

#BobbySimha #Urumeen #VishnuVishal #RamKumar #Mundasupatti #KaaliVenkat #MunishKanth #AxessFilmFactory

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;