‘கதை தான் ஹீரோ’ - ‘கொஞ்சம் கொஞ்சம்’ பட விழாவில் சீனுராமசாமி பேச்சு!

வித்தியாசமான வேடத்தில் அப்புக்குட்டி நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்’

செய்திகள் 12-Nov-2016 2:51 PM IST VRC கருத்துக்கள்

‘மிமோஷா’ என்ற பட நிறுவம் சார்பில் பெட்டி, பி.ஆர்.மோகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள பாம் ‘கொஞ்சம் கொஞ்சம்’. தமிழில் கஸ்தூரிமான் என்ற படத்தை இயக்கியவரும், பிரபல மலையா பட இயக்குனரும், கதாசிரியருமான மறைந்த லோகித தாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய உதயசங்கரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கோகுல் கதாநாயகனாகவும், நீனு கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அப்புக்குட்டி ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடிக்க, மன்சூரலிகான், பிரியா மோகன், மதுமிதா, மலையாள நடிகர் ஜெயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக இசை அமைப்பாலர் வல்லவன் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, ‘‘இந்த படத்தின் போஸ்டர்களையும், விளம்பரங்களையும் பார்த்தபோது மனசுக்குள் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் இங்கு படத்தின் பாடல்களையும் டிரைலரையும் பார்த்தபோது படத்தில் ஜீவனுள்ள ஒரு கதை இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். இசை, ஒளிப்பதிவு, கதாபாத்திரப் படைப்பு அனைத்தும் அற்புதமாக வந்திருக்கிறது. ஒரு படத்தின் ஹீரோ யார் என்றால் அது கதை தான்! இது உலக சினிமாவுக்கே பொருந்துகிற விஷயம்! இந்த படத்தில் நல்ல கதை இருக்கிறது. அதனால் இப்படம் நிச்சயம் ஜெயிக்கும்’’ என்றார்.

இயக்குனர் மீரா கதிரவன் பேசும்போது, ‘‘நானும் இயக்குனர் உதயசங்கரனும் லோகி சாரோட சிஷ்யர்கள்! உதயசங்கரன் முதலில் ‘விருந்தாளி’ என்று ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இது இரண்டாவது படம்! அன்பை வலியுறுத்தும் விதமான அருமையான ஒரு திரைக்கதை ‘கொஞ்சம் கொஞ்சம்’. இப்படத்தின் மூலம் உதயசங்கரன் தமிழில் பேசப்படுவார்’’ என்றார்.

இவர்களை தொடர்ந்து இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் அபி சரவணன், அஷோக், மன்சூரலிகான், அப்புக்குட்டி மற்றும் பலர் பேசினார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் சிஷ்யரான கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்றார்கள்.

#KonjamKonjam #SeenuRamasamy #SPMuthuraman #Appukutti #LakshmiRamakrishnan #Rahman #Ashok

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;