சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம்

செய்திகள் 11-Nov-2016 5:32 PM IST Chandru கருத்துக்கள்

‘ரெமோ’ படம் மூலம் படத்தயாரிப்புத்துறையில் கால்பதித்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 2வது தயாரிப்பாக மோகன் ராஜா இயக்கும் படத்தை அறிவித்தது. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கூடவே மலையாள ஹீரோ ஃபஹத் ஃபாசிலும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் ரோகிணி, சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் பூஜை போடப்பட்ட இந்த பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பித்துள்ளது.

படப்பிடிப்பு துவங்கிய தினத்திலேயே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வசூலைக் குறிவைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

#Sivakarthikeyan #Nayanthara #24AMStudios #MohanRaja #Anirudh #RDRaja #Remo #Sneha #RJBalaji #PrakashRaj

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;