‘சதுரங்கவேட்டை-2’ பூஜையுடன் துவங்கியது!

அரவிந்த் சாமி, த்ரிஷா இணையும் ‘சதுரங்கவேட்டை-2’

செய்திகள் 11-Nov-2016 1:27 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் மனோபாலாவின், ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து 2014-ல் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்கவேட்டை’. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்ற தகவலை ஏற்கெனவெ வெளியிட்டிருந்தோம். ‘சதுரங்கவேட்டை-2’வின் கதை, திரைக்கதை, வசனத்தை ஹெச்.வினோத் எழுத, ‘சலீம்’ படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்குகிறார் என்றும் இப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடிக்கிறார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெள்யீட்டு மற்றும் பூஜை இன்று காலை நடைபெற்றது.

’சதுரங்கவேட்டை-2’வில் அரவிந்த்சாமி, த்ரிஷாவுடன் ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், மனோபாலா, மயில்சாமி, பூர்ணா, ஆர்.என்.ஆர்.மனோகர், யோகி பாபு, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள். அஸ்வமித்ரா இசை அமைக்க, பாடல்களை அறிவுமதி, யுகபாரதி எழுதுகிறார்கள். ஒளிப்பதிவை கே.ஜி.வெங்கடேஷ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவக்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;