நடிகை பாவனாவின் சகோதரர் இயக்கும் படம்!

நடிகை பாவனா சகோதரர்  இயக்கத்தில் கலையரசன் நடிக்கும்   ‘பட்டினப்பாக்கம்’

செய்திகள் 11-Nov-2016 1:14 PM IST VRC கருத்துக்கள்

கலையரசன் கதாநாயகனாகவும், அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. முள்ளமூட்டில் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூ தயாரிக்கும் இப்படத்தை நடிகை பாவனாவின் சகோதரர் ஜெய் தேவ் இயக்கி வருகிறார். இப்படத்தில் கலையரசன், அனஸ்வரா ஜோடியுடன் சாயா சிங், யோக் ஜாபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன் பாப், மதுமிதா, சுவாமிநாதன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இஷான் தேவ் இசை அமைக்க, ரானா ஒளிப்ப்திவு செய்து வருகிறார். அதுல் விஜய் எடிட்டிங் பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை மோகன மகேந்திரன் செய்கிறார். இந்த படத்தின் டீசரை நேற்று மாலை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். பல்வேறு ஆங்கில படங்களை விநியோகம் செய்துள்ள ‘எஸ்.பி.சினிமாஸ்’ என்ற நிறுவனம் ‘பட்டினப்பாக்கம்’ படத்தின் விளம்பரம் மற்றும் விநியோகம் செய்யும் வேலைகளை மேற்கொள்ளவுள்ளது.

#Pattinapakkam #Kalaiarasan #AnaswaraKumar #MullamoottalProduction #RohidMathew #Bhavana #Jayadev #JohnVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டினப்பாக்கம் - டீசர்


;