‘U’ சர்டிஃபிக்கெட்டுடன் களமிறங்கும் ‘சென்னை-28-2’ அணியினர்!

வெங்கட் பிரபு படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 11-Nov-2016 12:55 PM IST VRC கருத்துக்கள்

இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வரும் வெங்கட் பிரபுவின் ‘சென்னை-28, இரண்டாவது இன்னிங்ஸ்’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு அனைவரும் பார்க்க கூடிய படமாக ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வரும் இப்படக் குழுவினர் மேலும் குதூகலத்திற்கும், மகிழ்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர். ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு முதல் பாகத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே இசை அமைக்க வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

#Chennai28II #VenkatPrabhu #YuvanShankarRaja #Jai #ArvindAkash #Siva #Vijayalakshmi #PremgiAmaran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;