கலையரசன் பட டீஸர்களை வெளியிடும் தனுஷ், பா.ரஞ்சித்!

‘காலகூத்து’ ‘பட்டினப்பாக்கம்’ பட டீஸர்களை வெளியிடும் தனுஷ், பா.ரஞித்!

செய்திகள் 10-Nov-2016 3:16 PM IST VRC கருத்துக்கள்

கலையரன் கதாநாயகனாகவும், அனஸ்வர குமார் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இயக்கும் இப்படத்தின் டீஸரை இன்று (10-11-16) மாலை 4.30 மணிக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிடுகிறார். பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ மற்றும் ரஜினியின் ‘கபாலி’ படங்களில் கலையரசன் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ‘முளமூட்டில் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரித்து வரும் ‘பட்டினப்பாக்கம்’ படத்திற்கு இஷான் தேவ் இசை அமைக்க, ரானா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துடன் பிரசன்னா, கலையரசன், ஸ்ருஷ்டி டாங்கே, தன்ஷிகா முதலானோர் நடித்துள்ள ‘காலக்கூத்து’ என்ற படத்தின் டீஸரும் இன்று வெளியாகிறது. இந்த டீஸரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். ஆக, ஒரே நாளில் கலையரன் நடித்த இரண்டு படங்களின் டீஸர்கள் வெளியாகிறது. எம்.நாகராஜன் இயக்கியுள்ள ‘காலக்கூத்து’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார்.

#Kalaiarasan #Kalakoothu #Pattinapaakkam #AnaswaraKumar #PaRanjith #Dhanush #IshanDev #Dhansika

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிக்கல் நிக்கல் வீடியோ பாடல் - காலா


;