ரஜினி படத்திற்கு பிறகு பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ‘பைரவா’

வியாபாரம் சூடு பிடித்த விஜய்யின் பைரவா!

செய்திகள் 10-Nov-2016 12:32 PM IST VRC கருத்துக்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ பட ஷூட்டிங் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. லேட்டஸ்டாக கிடைத்த தகவலின் படி ‘பைரவா’வின் திருச்சி ஏரியாவை ‘கிரீன் ஸ்கிரீன்ஸ்’ நிறுவனர் பி.கே.நாராயணசாமி பெரும் தொகைக்கு வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. திருச்சி ஏரியாவில் ரஜினி படங்களுக்கு அடுத்த படியாக விஜய்யின் ‘பைரவா’ படம் பெரிய தொகைக்கு வியாபாரமாகியுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது விஜய்யின் ‘பைரவா’.

#Vijay #Bairavaa #Ilayathalapthy #Bharathan #KeerthySuresh #SanthoshNarayanan #Kabali #Sathish #VijayaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;