பிரபுவின் 200 படங்களில் 70 அறிமுக இயக்குனர்கள்!

‘மீன் குழம்பும் மண் பானையும்’ பிரபுவின் 200ஆவது படம்!

செய்திகள் 10-Nov-2016 12:24 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கத்தில் நாளை (11-11-16) ரிலீசாகவிருக்கிற ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்க, அஷ்னா சவேரி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு காரைக்குடியிலிருந்து மலேசியா சென்று ஹோட்டல் நடத்தும் அண்ணாமலை செட்டியாராக, காளிதாசின் அப்பாவாக நடித்துள்ளார். இது பிரபுவின் 200-ஆவது படமாகும். இது குறித்து பிரபு கருத்து தெரிவிக்கும்போது,

‘‘இப்படத்தில் வரும் அண்ணாமலை செட்டியார் கேரக்டரில் நானே நடிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் அமுதேஷ்வர் உறுதியாக இருந்தார். கதை கேட்டபோது எனக்கும் பிடித்து விட்டது. அதனால் நடித்தேன். இது எனது 200-ஆவது படமாகும். நான் எப்போதுமே சீனியர் இயக்குனர்களை போல அறிமுக இயக்குனர்களுக்கும் மரியாதை மதிப்பு கொடுப்பவன். அதனால் தான் அறிமுக இயக்குனர்கள் இயக்கிய நிறைய படங்களில் நடித்தேன். நான் இதுவரை நடித்த 200 படங்களில், கிட்டத்தட்ட 70 படங்கள் அறிமுக இயக்குனர்கள் இயக்கிய படங்கள் தான்! அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் அமுதேஷ்வரும் அடக்கம்’’ என்றார்.

#MeenkuzhampumManpaanaiyum #Prabhu #KamalHaasan #PoojaKumar #Vishwaroopam #UttamaVillan #KalidasJayaram #AshnaSaveri #Prabhu200thFilm

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;