‘அச்சம் என்பது மடமையடா’ புரொமோஷன் நிகழ்ச்சிக்கு சிம்பு ஏன் வரவில்லை?

பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத ஹீரோ!

செய்திகள் 10-Nov-2016 11:34 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இந்த படம் நாளை (11-11-16) ரிலீசாகவிருப்பதை முன்னிட்டு நேற்று மாலை சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குனர் கௌதம் மேனன், கதாநயகி மஞ்சிமா மோகன், ஒளிப்பதிவாளர் டேனி ரெய்மாண்ட், கலை இயக்குனர் ராஜீவன், நடன இயக்குனர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ சிம்பு கலந்துகொள்ளவில்லை. நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொள்ளாதது பற்றி இயக்குனர் கௌதம் மேனனிடம் கேட்டபோது, ‘‘ஏன் சிம்பு வரவில்லை என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவரிடம் நேற்று நான் பேசும்போது, ‘பிரதர், நான் படம் சம்பந்தமாக சில பத்திரிகையாளர்களிடம் பேசி விட்டேன். இனி நான் வரவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். நிகழ்ச்சியை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்’’ என்றார். ஒருவேளை அதனால் தான் அவர் வர விரும்பவில்லையோ என்னமோ? சிம்பு இந்த நிகழ்ச்சிக்கு வராதது குறித்து இவ்வளவு தான் நான் பேச முடியும்’’ என்றார்.

#AchchamYenbadhuMadamaiyada #Silambarasan #Simbu #Vikram #Guathammenon #STR #ManjimaMohan #OndragaEntertainment #ARRahman #AYM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;