சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய்?

கமல், ரஜினி, அஜித்துக்கு அடுத்து விஜய்?

செய்திகள் 10-Nov-2016 10:53 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன், ரஜினி, அஜித் உட்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ‘சிவாஜி ஃபிலிம்ஸ்’. இந்த நிறுவன தயாரிப்பில் விஜய் இது வரை நடித்ததில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், நேற்று நடிகர் பிரபுவை சந்தித்தபோது அது பற்றி அவரிடம் கேட்டோம்! அப்போது அவர், ‘‘கமல் சார், ரஜினி சார், அஜித் சாரை வைத்து எல்லாம் படங்கள் பண்ணியிருக்கிறோம். விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம். அதற்கான முயற்சிகள் கடந்த ஆறேழு ஆண்டுகளாக நடந்து வருகிறது. விஜய்யும் எங்களுக்கு படம் நடித்து தருவதாக சொல்லியிருக்கிறார். அதனால் அது மிக விரைவில் நடக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

#Vijay #SivajiProduction #Prabhu #Bairavaa #Rajini #Kamal #Ajith #Theri #Chandramukhi #Aasal #VikramPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;