நாளை (11-11-16) ரிலீசாகவிருக்கிற கௌதம் மேனன், சிம்பு கூட்டணியின் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் சமபந்தமாக நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதம் மேனனிடம், ‘‘இந்த படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் இருக்கும். இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டபோது, ‘‘உண்மையிலேயே இந்த படம் இவ்வளவு காலதாமதமானதற்கு என்ன காரணம் என்று உங்களை போல எனக்கும் தெரியாது. ஏதேதோ காரணங்களால் லேட் ஆயிடுச்சு! இதற்கு நான் சிவகார்த்திகேயன் மாதிரி இங்கு மேடையில் அழ முடியாது! இந்த படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் அனாலும் தமிழ், தெலுங்கு என் இரண்டு மொழிகளிலும் படத்தை எடுத்து முடிக்க 60 நாட்கள் எடுத்து முடித்திருக்கிறோம்’’ என்று சொன்ன கௌதம் மேனன் நான் இது வரை இயக்கிய ஹீரோக்களில் எந்த டார்ச்சரும் தாராத ஹீரோ சிம்பு தான்! சிம்புவிடம் கதையின் சில லைன்கள் சொன்னால் போதும்! செய்யலாம் என்பார்! ஆனால் மற்ற ஹீரோக்கள் அப்படி இல்லை! முழு கதையும் வேண்டும் என்று டார்ச்சர் கொடுப்பார்கள்! ஆனாலும், நான் இதுவரை இயக்கிய எல்லா ஹீரோக்களையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவர்களுடன் மீண்டும் படம் பண்ண வேண்டும் என்பதும் என் விருப்பம் தான்’’ என்றார்.
#AchchamYenbadhuMadamaiyada #Vikram #Guathammenon #STR #ManjimaMohan #OndragaEntertainment #ARRahman #AYM
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...