கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் நாளை உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்திற்குப் பிறகு துவங்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகிவரும் இன்னொரு படமான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கௌதம் மேனனின் மூத்த மகனான ஆர்யா (வயது 13) அத்தனைவிதமான லேட்டஸ்ட் பாடல்களையும் அவருடைய பிளே லிஸ்ட்டில் வைத்திருப்பாராம். சமீபத்தில் ஆர்யா பரிந்துரைத்ததின் பேரில் அனிருத்தின் ‘தங்கமே...’ பாடலைக் கேட்டிருக்கிறார் கௌதம். அந்தப் பாடலும், அதன் ஃபீலிங்கும் கௌதமிற்கு ரொம்பவும் பிடித்துப்போகவே, ‘தங்கமே....’ ஸ்டைலில் ஒரு லவ் ஃபீலிங் பாடல் இருந்தால் சொல்லுமாறு தன் மகன் ஆர்யாவிடம் கேட்டுள்ளார் கௌதம். அதற்கு அவரும் பாடல் ஒன்றைத் தந்திருக்கிறார். அந்தப்பாடலை தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் படமாக்கியுள்ளாராம் கௌதம். இந்த தகவலை சமீபத்திய வாரஇதழ் பேட்டி ஒன்றில் கௌதம் மேனனே கூறியுள்ளார்.
#EnnaiNokkiPaayumThotta #Dhanush #GauthamMenon #Thangame #NaanumRowdythan #Arya #YuvanShankarRaja
‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...