மாதவன், சூர்யா, கமல்ஹாசன், சிம்பு, அஜித் உட்பட பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய கௌதம் மேனன், தற்போது தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால் நடிகர் விக்ரமும் கௌதம் மேனனும் இதுவரை இணைந்து படம் பண்ணியதில்லை. அந்த குறை விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சென்னையில் நடந்த ‘அச்சம் என்பது மடமையடா’ பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் இயக்குனர் கௌதம் மேனன் அடுத்து விக்ரமை வைத்து இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதை தெரிவித்தார். அதைப் போல சூர்யாவை வைத்தும் படத்தை இயக்குவதற்காக பேசி வருகிறோம் என்றும் தெரிவித்த கௌதம் மேனன், ‘துருவ நட்சத்திரம்’ கதையில் சூர்யா நடிக்காததன் காரணத்தையும் விளக்கினார். ‘துருவநட்சத்திரம்’ கதை ஆங்கில படம் மாதிரி பண்ண வேண்டிய கதை. அந்த கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. ஆங்கில பட லெவலில் உள்ள கதையை நாம் அப்புறம் பண்ணலாம. தமிழுக்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார் சூர்யா! அதனால் தான் ‘துருவ நட்சத்திரம்’ கதையில் சூர்யா நடிக்கவில்லை. இருந்தாலும் நாங்கள் படம் அடுத்து பண்ணுவது குறித்து பேசிகிட்டிருக்கிறோம்’’ என்றார்.
#AchchamYenbadhuMadamaiyada #Vikram #Guathammenon #STR #ManjimaMohan #OndragaEntertainment #ARRahman #AYM
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...