பாபி சிம்ஹா படத்திற்கு கை கொடுக்கும் விஷால்!

‘பாம்பு சட்டை’க்காக விஷாலிடம் கோரிக்கை வைத்த மனோபாலா!

செய்திகள் 9-Nov-2016 1:52 PM IST VRC கருத்துக்கள்

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘பாம்பு சட்டை’. ‘சதுரங்க வேட்டை’ படத்தை தொடர்ந்து மனோபாலாவின் தயாரிப்பில் உருவாகி வந்த இப்படத்தின் தயாரிப்பில் சமீபத்டில் ‘சினிமா சிட்டி’ கே.கங்காதரனும் இணைந்தார். தற்போது இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் ‘பாம்பு சட்டை’யை விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள படக்குழுவினர் இப்படத்தின் டீஸரை வெகு விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். நடிகர் சங்க செயலாளராக இருந்து வரும் நடிகர் விஷாலிடம் இப்படத்தின் டீசரை வெளியிடும்படி மனோபாலா கோரிக்கை வைக்க, விஷால் உடனே அதற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார். இதனல் விஷால் கையால் வெளியாகவிருக்கிறது ‘பாம்பு சட்டை டீஸர்’. ஆடம்ஸ் இயக்கி வரும் ‘பாம்பு சட்டை’ படத்திற்கு அஜீஸ் இசை அமைக்கிறார்.

#PaambhuSattai #Vishal #NadigarSangam #Manobala #BobbySimha #KeerthySuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;