ரஜினி ரசிகர் மன்ற தலைவரானார் நட்டி நட்ராஜ்!

‘எங்கிட்ட மோதாதே’யில் ரஜினி, கமல் ரசிகர்கள் மோதல்!

செய்திகள் 9-Nov-2016 1:26 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாண்டிராஜிடம் உதவியாளராக பணியாற்றியவர் ராமு செல்லப்பா. இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘எங்கிட்ட மோதாதே’. இப்படத்தில் நட்டி நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி ஒரு ஜோடியாகவும், ‘மூடர்கூடம்’ புகழ் ராஜாஜி, பார்வதி நாயர் இன்னொரு ஜோடியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, விஜய் முருகன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். அறிமுக இசை அமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கதாநாயகன் நட்டி நட்ராஜ் பேசும்போது, ‘‘1980 காலகட்டத்தில் நடக்கிற சினிமா பற்றிய கதை இப்படம். இதில் கட்-அவுட் வரையும் ஓவியர், ரஜினி ரசிகர், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் என்று பல்வேறு கெட்-அப்களில் நான் நடித்திருக்கிறேன். அந்த காலத்தில் சினிமா தியேட்டர்களில் முன்னணி நடிகர்களின் கட்-அவுட் வைப்பதில் எவ்வளவு பிரச்சனைகளும் சர்ச்சைகளும் இருந்திருக்கிறது என்பதை இப்படத்தில் நடித்தபோது தான் உணர்ந்தேன். நான் ரஜினி படங்களை வரையும் ஓவியராக ரசிகராக நடிக்கிறேன் என்றால் ராஜாஜி கமல் படடங்களை வரையும் ஓவியராக, ரசிகராக நடிக்கிறார். இந்த இரண்டு கேரக்டர்கள், இந்த கேரக்டர்களின் காதல், மொதல் என்று படம் விறுவிறுப்பாக பயணிக்கும். 80 காலகட்டத்தில் பயணிக்கும் கதை என்பதால இந்த கதையை படமாக்க இயக்குனர் ராமு செல்லப்பா மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் அவரது உழைப்புக்கு நிச்சயம் வெற்றி உண்டு! ரசிகர்களிடையே ‘சுப்பிரமணியபுரம்’ படம் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அப்படி இந்த படமும் ஏற்படுத்தும்’’ என்றார்.

படத்தின் இயக்குனர் ராமு செல்லப்பா பேசும்போது, ‘‘ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கதையை தயாரிக்க தேர்வு செய்தவர் அப்போது இந்நிறுவனத்தில் பதவியில் இருந்த செந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான்! என்னுடைய முதல் படமே மிகப் பெரிய ஒரு நிறுவன தயாரிப்பாக வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. திருநெல்வேலி பின்னணியில் நடக்கும் இந்த கதை 1980 காலகட்டத்தில் சினிமா தியேட்டர்களில் கட் அவுட் வைப்பதில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தியுள்ளோம். இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு இப்படம் புதுமையான அனுபவத்தை தரும் படமாக இருக்கும்’’ என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ‘சலீம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த எம்.சி.கணேஷ் கவனித்துள்ளார். படத்தொகுப்பை அத்தியப்பன் சிவா செய்துள்ளார். கலை இயக்கத்தை ஆறுச்சாமி கவனித்துள்:ளார்.

‘ஈராஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்துடன் ஆர்.வி.ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ‘பிச்சைக்காரன்’, ‘இறைவி’, ‘குற்றமே தண்டனை’ உட்பட பல படங்களை விநியோகம் செயத கே.ஆர்.ஃபிலிம்ஸ் வெளியிடவிருக்கிறது. ‘எங்கிட்ட மோதாதே’வை டிசம்பர் 2-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

#EnkittaMothathe #Natraj #SanchitaShetty #ParvathiNair #Pandiraj #RamuChellappa #Rajaji #RadhaRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;