மாநகரம், மாயவனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப்!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நாயகனாகியுள்ளார் சந்தீப் கிஷன்

செய்திகள் 9-Nov-2016 11:09 AM IST Chandru கருத்துக்கள்

‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தெலுங்கிலிருந்து தமிழுக்க அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் முழுநேர பிஸியாகிவிட்டதால் சிறிது காலம் தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வருடம் ‘மாநகரம்’ படம் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் துவங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநகரம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அதோடு சி.வி.குமார் இயக்கத்தில் ‘மாயவன்’ படத்திலும் நடித்துள்ளார் சந்தீப்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சந்தீப்புக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை மெஹ்ரீன் பிர்ஸதா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிக, நடிகையர், டெக்னீஷியன் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SandeepKishan #YarudaMahesh #Maanagaram #Mayavan #Suseendiran #LokeshKanagaraj #CVKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுட்டுப்புடிக்க உத்தரவு டீஸர்


;