40 மணி நேரத்தில் 40 லட்சம் : கர்ஜிக்கும் ‘சிங்கம் 3’

‘கபாலி’க்குப் பிறகு மிகக்குறைந்த நேரத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட டீஸராக ‘சிங்கம் 3’ சாதனை படைத்திருக்கிறது

செய்திகள் 9-Nov-2016 10:12 AM IST Chandru கருத்துக்கள்

இன்றைய தேதியில் இந்தியாவிலேயே ஒரே நாளில் கிட்டத்தட்ட 1 கோடி முறை பார்வையிடப்பட்ட டிரைலர் என்றால் அது அமீர்கானின் ‘டங்கல்’ டிரைலர் மட்டுமே. அதற்குப்பிறகு சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ டீஸர் 24 மணி நேரத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களை எட்டியது. இப்போது கபாலியைத் தொடர்ந்து மிக விரைவில் 40 லட்சம் பார்வையிடல்களை எட்டிய டீஸர் என்ற சாதனையை சூர்யாவின் சிங்கம் 3 டீஸர் படைத்துள்ளது.

நவம்பர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு யு ட்யூபில் வெளியான ‘சிங்கம் 3’ டீஸர், வெளியான முதல் 17 மணி நேரத்திலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்களை எட்டியது. இந்நிலையில், தற்போது இந்த டீஸர் வெளியாகி 40 மணி நேரம் ஆகியிருக்கும் சூழலில் இந்த டீஸர் 40 லட்சம் பார்வையிடல்களை எட்டியுள்ளது. ‘கபாலி’க்குப் பிறகு மிக வேகமாக இந்த எண்ணிக்கை எட்டியுள்ள டீஸர் ‘சிங்கம் 3’ மட்டுமே.

#S3 #Singam3 #Suriya #Anushka #Hari #ShrutiHaasan #StudioGreen #HarrisJayaraj #Kabali #Rajinikanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;