தனுஷின் மாஸ் அறிவிப்பு : புதிய கூட்டணியில் ‘விஐபி’ 2ஆம் பாகம்

தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2ஆம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்

செய்திகள் 9-Nov-2016 10:02 AM IST Chandru கருத்துக்கள்

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்து 2014ல் வெளிவந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’. தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்த இப்படம் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. தனுஷின் 25வது படமாக அமைந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தன. இப்படத்திற்குப் பிறகு வெளிவந்த தனுஷ் படங்கள் எதுவும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்காத சூழலில், சமீபத்தில் வெளிவந்த ‘கொடி’ மட்டுமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இப்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்கவிருப்பதாக நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷின் வுண்டபார் ஃபிலிம்ஸ் நிறுவனமும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்குகிறார்.

‘வேலையில்லா பட்டதாரி 2’ குறித்து நடிகர் தனுஷ் செய்துள்ள ட்வீட்டில் இசையமைப்பாளர்கள் அனிருத்தையும், ஷான் ரோல்டனையும் டேக் செய்திருக்கிறார். இதனால் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பமாக உள்ளது. அதேபோல் ஹீரோயின் யார் என்பதையும் தனுஷ் குறிப்பிடவில்லை.

தனுஷின் 33வது படமாக உருவாகவிருக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’வின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவிருக்கிறது.

#Dhanush #VIP2 #VelaillaPattadhaari #Velraj #SoundaryaRajinikanth #WunderbarFilms #Anirudh #AmalaPaul, Samuthirakani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;