சந்தானம் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாரா அனிருத்?

சந்தானத்தின் ‘சக்கபோடு போடு ராஜா’ படத்திற்கு இசையமைக்க அனிருத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்

செய்திகள் 8-Nov-2016 12:18 PM IST Chandru கருத்துக்கள்

முதல் இரண்டு படங்களில் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சந்தானம், தனது மூன்றாவது படத்தின் நாயகனாக ஹிட்டும் கொடுத்துவிட்டார். அந்த உற்சாகத்தோடு தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், விடிவி கணேஷ் தயாரிப்பில் ‘சக்கப்போடு போடு ராஜா’, வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதில் ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்திற்கு இசையமைப்பதற்கு அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். சந்தானம் ஹீரோவாக நடித்த 3 படங்களிலுமே பாடல்கள் பெரிய அளவில் பேசப்படாததால், அவரின் இந்தப்படத்தின் பாடல்களை எப்படியும் ஹிட்டாக்கிவிட வேண்டும் என்று நினைத்ததால்தான் அனிருத்தை இசையமைக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் சந்தானம்.

#Santhanam #ServerSundaram #VTVGanesh #Selvaraghavan #SakkaPoduPoduRaja #VaibhaviShandaliya #Anirudh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;