‘கபாலி’, பைரவாக்குப் பிறகு ‘சிங்கம் 3’ செய்த சாதனை!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சிங்கம் 3’ படத்தின் டீஸர் புதிய சாதனை படைத்துள்ளது

செய்திகள் 8-Nov-2016 11:09 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒரு படத்தின் டீஸர் யு ட்யூபில் வெளியாகி, பல நாட்களுக்கப் பிறகே 5 லட்சம், 10 லட்சம் பார்வையிடல்களைத் தாண்டும். ஆனால், சமீபகாலமாக டீஸர், டிரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சம் பார்வையிடல்களைக் கடந்து சாதனை புரிந்து கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் ரசிகர்களின் சமூக வலைதள பயன்பாடு மிகஅதிகளவில் அதிகரித்திருப்பதுதான். ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் டீஸர்தான் தென்னிந்திய சினிமாவின் முதல் 1 கோடி பார்வையிடல்களைப் பெற்ற டீஸர் என்ற சாதனையைப் படைத்தது. அதன்பிறகு விஜய்யின் ‘தெறி’யும் இதே சாதனையைச் செய்தது. பின்னர், ரஜினியின் ‘கபாலி’ ஒட்டுமொத்த இந்திய டீஸர் சாதனையையும் முறியடித்து முதன்முதலாக 3 கோடி பார்வையிடல்களை எட்டிய டீஸர் என்ற சாதனையைப் படைத்தது.

அதேபோல் டீஸர் வெளியான முதல் 20 மணி நேரத்திற்குள்ளாக 20 லட்சம் பார்வையிடல்களைக் கடந்த டீஸர் என்ற சாதனையை கபாலியும், பைரவாவும் படைத்திருந்தன. இந்தவரிசையில் தற்போது ‘சிங்கம் 3’யும் இணைந்திருக்கிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. தற்போது 17 மணி நேரத்தில் ‘சிங்கம் 3’ டீஸர் 20 லட்சம் பார்வையிடல்களை எட்டியுள்ளது.

#S3 #Suriya #Kabali #Hari #Rajinikanth #Vijay #Bairavaa #Singam3 #Anushka #ShrutiHaasan #StudioGreen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;