தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்!

தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகும் விஜய்சேதுபதியின் ‘புரியாத புதிர்’

செய்திகள் 7-Nov-2016 3:40 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிக்கும் ‘புரியாத புதிர்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. ‘ரெபெல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஜே.சதீஷ்குமார் தமிழில் வெளியிடுகிறார். இப்படம் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. ‘புரியாத புதிர்’ படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை ‘டி.வி.சினி கிரியேஷன்ஸ்’ பட நிறுவனம் கைபற்றியிருக்கிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகவிருக்கும் ‘புரியாத புதிர்’ படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் கவனிக்க, சாம்.சி. இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;