கௌதம் - சிம்பு பட சென்சார் ரிசல்ட், ரன்னிங் டைம்?

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது

செய்திகள் 7-Nov-2016 3:20 PM IST Chandru கருத்துக்கள்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. முதல்பாதி காதல், இரண்டாம்பாதி ஆக்ஷன் என ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்று காலை இப்படத்தின் சென்சார் காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கி, படத்தை வெளியிட க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளனராம். இப்படம் வரும் 11ஆம் தேதி உலகமெங்கும் 400க்கும் அதிகமாகன திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறதாம். 135 நிமிடங்கள் ரன்னிங் டைமில் உருவாகியிருக்கிறதாம் ‘அச்சம் என்பது மடமையடா’.

#AYM #STR #ManjimaMohan #GuathamMenon #ARRahman #AchchamYenbathuMadaimaiyada #Simbu #Silambarasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;