100 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம்!

100 கோடி கிளப்பில் இடம் பிடித்த முதல் மலையாள படம் ‘புலிமுருகன்’

செய்திகள் 7-Nov-2016 2:11 PM IST VRC கருத்துக்கள்

மோகன்லால் நடிப்பில் கடந்த (அக்டோபர்) மாதம் 7-ஆம் தேதி வெளியான மலையாள படம் ‘புலிமுருகன்’. கேரளா தவிர்த்து இதர மாநிலங்களிலும் வெளியான இப்படம் வெளியாகிய ஒரு சில நாட்களிலேயே மலையாளத்தில் வசூலில் சாதனை படைத்த ‘திருசியம்’, ‘பெங்களூர் டேஸ்’, ‘ஒப்பம்’ ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இத்தனைக்கும் ‘புலிமுருகன்’ படத்தை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் எந்த வெளிநாட்டிலும் வெளியிடப்படவில்லை. கடைசியாக கடந்த வெள்ளிக் கிழமை தான் (நவம்பர் 4-ஆம் தேதி…) வெளியிடப்பட்டது. பெரும்பாலான வெளிநாடுகளில் ரிலீசான ‘புலிமுருகனு’க்கு அங்கும் பெரும் வரவேற்பு கிடைத்து பெரும் வசூல் குவித்து வருகிறது. அனைத்து மலையாள படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்த ‘புலிமுருகன்’ இப்போது மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளது. அதாவது இதுவரை எந்த ஒரு மலையாள படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததில்லை. இப்போது புலிமுருகன் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அந்த சாதனையையும் படைத்துள்ளது என்பதை ‘புலிமுருகன்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வைசாக் இயக்கிய ‘புலிமுருகன்’ படத்தில் மோகன்லாலுடன் வில்லனாக ஜெகபதிபாபு நடித்திருந்தார். கதாநயகியாக கமலினி முகர்ஜி நடிக்க, போலீஸ அதிகாரியாக கிஷோர் நடித்திருக்கிறார்.

#PuliMurugan #MohanLal #Drishyam #BangaloreDays #Oppam #Vaisak #KamaliniMukherji #Kishore

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காப்பான் - டீஸர்


;